Loading...

கமுதி கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் பெற்றனர்

A

Admin

November 03, 2026 • 11:40 AM

கமுதி கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் பெற்றனர்

கமுதி கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் பெற்றனர் ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி மைதானத்தில், முதல் ஆண்டாக மிகச் சிறப்பாக நடைபெற்ற கமுதி கிரிக்கெட் லீக் கே.சி.எல் 2026–27 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. ​இத்தொடரில் களமிறங்கிய கே. எப்.சி.சி அணியினர், லீக் சுற்று முதல் இறுதிப் போட்டி வரை தாங்கள் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவு செய்து, முதல் பரிசையும் சாம்பியன் பட்டத்திற்கான சுழல் கோப்பையையும் தட்டிச் சென்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஆர்.எஸ்.மங்கலம் அணியினர் இரண்டாம் பரிசை வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்குச் சுழல் கோப்பைகளும், தனிநபர் சிறப்புப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ​இப்பரிசளிப்பு விழாவிற்கு ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் பி. சண்முகபாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செ. வேல்மயில்முருகன், கமுதி வட்ட வழங்கல் அலுவலர் ச.வேலவன் த.வெ.க. முதுகுளத்தூர் பேரூர் கழகச் செயலாளர் எம் அரவிந்த் ஆகியோர் தலைமை வகித்தனர். ​விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் பி.கே.சிரஞ்சீவி, விருதுநகர் மாவட்ட பண்டகசாலை தலைவர்அம்மா சரவணன், அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் கௌதம்ராஜா, அருப்புக்கோட்டை HDFC வங்கி மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ​மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் இளவரசன், பூபாலன் (துபாய்), இந்திய ராணுவ மருத்துவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்திப் பேசினர். ​விழா ஏற்பாடுகளைக் கமுதி கிரிக்கெட் லீக் தலைவர் பி.எம்.காளிமுத்து, செயலாளர்,பிரகாஷ் மற்றும் கே.சி.எல். நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர். இதில் திரளான கிரிக்கெட் ரசிகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

- Advertisement -