வெற்றி பள்ளிகள் திட்டம்
வெற்றி பள்ளிகள் திட்டம்: திருமங்கலம் அரசு பள்ளி மாணவிக்கு “பொருளியலின் இளவரசி” விருது மதுரை அக்டோபர்;28 மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவி ஆசிபாவுக்கு, “பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு – 2026” என்ற கட்டுரை மற்றும் அவரது பொருளியல் சிந்தனைகளைப் பாராட்டி, “பொருளியலின் இளவரசி ஆசிபா” என்ற விருது வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் அருள்ஜோதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் புஷ்பராஜ், அமெரிக்கன் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் முத்துராஜா மற்றும் முதுகலைப் பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் விருதை வழங்கிப் பாராட்டினர்.வெற்றி பள்ளிகள் திட்டத்தின் கீழ் சனிக்கிழமைகளில் நடைபெற்ற வகுப்புகளில் பங்கேற்று, ஆசிரியர் முருகேசனின் வழிகாட்டுதலுடன் கட்டுரை எழுதியதாக மாணவி ஆசிபா தெரிவித்தார். மேலும், உயர்கல்வியில் பொருளியல் பயின்று, பொருளியல் வல்லுநராக உருவாகி, நாட்டின் வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கப் பங்களிப்பதே தனது இலட்சியம் என்றும் கூறினார்.இந்தச் சாதனைக்காக மாணவி ஆசிபாவை ஆசிரியர்களும் பேராசிரியர்களும் பாராட்டி வாழ்த்தினர்.