ஆசிரியராக மாறிய ஆட்சியர் நீலகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு ஊட்டி நவ 03 நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் அரசு பள்ளிகள் திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அரசு அலுவலகங்கள் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்
ஆசிரியராக மாறிய ஆட்சியர் நீலகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு ஊட்டி நவ 03 நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் அரசு பள்ளிகள் திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அரசு அலுவலகங்கள் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் குறிப்பாக அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டம் ஆகியவை தரமானதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்திய நிலையில் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளில் ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி வருவதோடு மாணவர்களுக்கு கல்வி திறன் மேம்பட நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா பகுதிகளில் உள்ள ஊட்டி குன்னூர் கூடலூர் பந்தலூர் கோத்தகிரி குந்தா பகுதிகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார் கோத்தகிரி கொணவக்கரை அரசு நடுநிலைப் பள்ளியில் கற்றல் திறன் மேம்பாடு பற்றி ஆய்வு மேற்கொண்டு ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார் இதேபோல நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி ஆர் பஜார் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் கல்வி கற்றல் குறித்த உரையாடினார் மாணவர்களின் புகார்களை தெரிவிக்க கேட்டுக்கொண்டதோடு ஆய்வுகள் மேற்கொண்டு கல்வித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.