போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.பி.கலந்துகொண்டார் ராமநாதபுரம்மாவட்டம்
போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.பி.கலந்துகொண்டார் ராமநாதபுரம்மாவட்டம் இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் மற்றும் குடும்பம், சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், போதைப்பொருள் ஒழிப்பில் மாணவர்களின் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வைத் தங்களது நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.