மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! மதுரை நவம்பர்; 04 மதுரை மாநகர காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் விபத்தில்லாமல் வாகனங்களை இயக்குவது, பொதுமக்களிடம் கனிவாகவும் பண்புடனும் நடந்துகொள்வது, சாலை விபத்துகள் ஏற்படும் நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது.