Loading...

அய்யப்பன் தாங்கல் ஊராட்சியில் பெரியநாயகம் சிலை திறப்பு, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்,

A

Admin

November 03, 2026 • 10:33 AM

அய்யப்பன் தாங்கல் ஊராட்சியில் பெரியநாயகம் சிலை திறப்பு, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்,

அய்யப்பன் தாங்கல் ஊராட்சியில் பெரியநாயகம் சிலை திறப்பு, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் வடக்கு ஒன்றியம், அய்யப்பன் தாங்கல் ஊராட்சி தெள்ளியார் அகரத்தில் பெரியநாயகம் அவரின் 62-வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு மண்டபம் அமைத்து முழு திருவுருவ வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னாள் திமுக அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான தா.மோ.அன்பரசன் சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி மற்றும் அய்யப்பன் தாங்கல் ஊராட்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை அப்பகுதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார். 2.11.2026 அன்று ஒரு நாள் முழுவதும் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம்,எத்திராஜ்,பொன். ஜீவா,ராஜாதேசிங், ஜெயகரன், தங்கராஜ், பாண்டுரங்கன், ஜனார்த்தனன், உஷாநந்தினி எத்திராஜ், கஜேந்திரன், தணிகைவேல், ராஜேந்திரன், செல்வகுமார் முன்னிலை வைத்தனர். குன்றத்தூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் உமாமகேஸ்வரி வந்தேமாதரம், வாழ்த்துரை வழங்கினார்கள், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் டி. ஆர்.சாரதி பெரியநாயகம்,டி ஆர்.எஸ்.சமூக அறக்கட்டளை ஆர். லாரன்ஸ் பெரியநாயகம், அனிதா சாரதி பெரியநாயகம் இவர்கள் சிறப்பாக செய்து சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று சிறப்பித்தனர். மேலும் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள், ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள், ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -