என் மனைவியை விட்டுடுங்க.... கதறும் அன்பில் மகேஷ்... த.வெ.க., விடம் சமரசம்...
என் மனைவியை விட்டுடுங்க.... கதறும் அன்பில் மகேஷ்... த.வெ.க., விடம் சமரசம்...
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் வகித்த பள்ளி கல்வி துறையில் நடந்த 100 கோடி மெகா ஊழல் தற்பொழுது அன்பில் மகேஷ் மொத்த குடும்பத்தையும் மிக பெரிய நெருக்கடியில் சிக்க வைத்து இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்த பி டி அரசகுமார் , தமிழகம் முழுவதும் உள்ள சி. பி. எஸ் .சி., மற்றும் தனியார் பள்ளிகளிடம் ,பள்ளி கல்வி தரத்தை உயர்த்த அங்கீகாரம் பெற்று தருவதாக
10 லட்சம் முதல் 1 கோடிக்கு மேல் என வசூல் வேட்டை நடத்தியதாக , தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்தவுடன் வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பி டி அரசகுமார் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து இருக்கிறது, இந்நிலையில் பி டி அரசகுமாரிடம் நடத்திய விசாரணையில், தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் செய்ததை ஒப்பு கொண்டார், அந்த பணத்தை அன்பில் மகேஷ் மனைவி மற்றும் அன்பில் மகேஷிடம் தான் கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றவியல் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டு சில முக்கிய அவனங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியானது, மேலும் இந்து தொடரபாக அன்பில் மகேசுக்கு சம்மன் அனுப்பியும் விசாரணையை நடத்தி இருக்கிறது மத்திய குற்றவியல் போலீசார்.
இந்நிலையில் அன்பில் மகேஷ் நபரான வாளாடி கார்த்திக்கும் இந்த இவரத்தில் சிக்கி இருக்கும் நிலையில் அவரும் இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், மேலும் அன்பில் மகேஷ் உதவியாளரும் இந்து தொடர்பான விசாணையில் ஆஜராகி அவர் தரப்பு விளக்கங்களை கொடுத்துள்ளார், இந்நிலையில் அன்பில் மகேஷ் நெருக்கமான வட்டாரங்களில் இருக்கும் ஒவ்வொருவரும்,
விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதில் பி டி அரசகுமார் வசூல் செய்த பெரும் தொகையை அன்பில் மகேஷ் மனைவியிடம் தான் கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்து இருப்பதால், அடுத்து அன்பில் மகேஷ் மனைவிக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட இருப்பதால், தன்னுடைய மனைவியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் அன்பில் மகேஷ் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் பாஜக தலைமையின் முக்கிய புள்ளி ஒருவரை தொடர்பு கொண்ட அன்பில் மகேஷ், இந்த விவகாரத்தில் தன் மீது என்ன வழக்கு வேண்டும் என்றாலும் போடுங்க, என் மனைவியை உள்ளே இழுக்க வேண்டாம், மேலும் இந்த விவகாரத்தில் அனைத்திற்கும் நானே பொறுப்பாகி கொள்கிறேன் , தயவு செய்து என் மனைவியை உள்ளே இழுக்க வேண்டாம் என தவெக தலமையில் இருக்கும் முக்கிய புள்ளி ஒருவரிடம் அன்பில் மகேஷ் சமரசம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது, அந்த தவெக தலமையில் இருக்கும் அந்த முக்கிய புள்ளி, உங்க சூழலை புரிந்து கொள்ள முடிகிறது, இந்த விவகாரத்தில் உங்கள் மனைவியை உள்ளே வராதபடி என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று அன்பில் மகேஷ் க்கு ஆறுதல் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது, எந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறையில் நடந்த 100 கோடி மெகா ஊழலில் அன்பில் மகேஷ் மனைவி தப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த ஊழல் விவகாரம் முதல்வரின் நேரடி பார்வையில் நடைபெற்று வருவதால், எதுவேண்டுமானாலும் இதில் நடக்கலாம் என்றும், அந்த வகையில் அன்பில் மகேஷ் மனைவி இந்த விவகாரத்தில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவாரா.? அல்லது தப்பிப்பாரா.? என்பது அடுத்து ஓரிரு நாட்களில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டால் விசாரணைக்கு உள்ளே கொண்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.