Loading...

கிராமிய கலைஞருக்கு காமராஜர் விருது

A

Admin

October 04, 2026 • 05:23 PM

கிராமிய கலைஞருக்கு காமராஜர் விருது

கிராமிய கலைஞருக்கு காமராஜர் விருது 


சென்னை அக் :5


கிராமங்களில் நடக்கும் அம்மன் மற்றும் சுடலைமாடன்சாமி கோவில் திருவிழாக்களில் வில்லிசை கச்சேரி நிச்சயம் இடம்பெறும். சாமியாடிகளை ஆட வைப்பதோடு ஆன்மிக வரலாறுகளை கதையாக சொல்லி, கோவில் திருவிழாக்களுக்கு உயிரோட்டம் கொடுத்தவர்கள் வில்லிசை கலைஞர்கள்.


கால மாற்றம், நாகரீக மாற்றம் காரணமாக மெல்ல அழிந்து வந்தது வில்லிசை கலை. கோவில் திருவிழாக்களில் சம்பிரதாயத்துக்காக வில்லிசை கச்சேரிகள் நடந்தாலும் அதை பார்க்கவும் கேட்கவும் ஆட்கள் இருக்காது. அந்த சமயங்களில் வில்லிசை கலைஞர்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். 


இப்படிப்பட்ட நிலையில் தான் புயல் போல வந்தார் வில்லிசை பாடகி தென்காசி மாவட்டம் அச்சங்குட்டம் செல்வி மாதவி. அதிக ஒப்பனையை தவிர்த்து சாதாரண கிராமத்து கலைஞராக அவர் பாடிய விதம் மக்களை கவர்ந்தது. சமூக ஊடகங்களில் அவர் பரபரப்பாக பேசப்பட்டார். இதுபேன்று இன்னும் இளம் கலைஞர்களை சொல்ல முடியும். 


அதைத் தொடர்ந்து கோவில் திருவிழாக்களில் வில்லிசை கச்சேரிக்கு மவுசு கூடியது. மறந்து போன மறக்கடிக்கப்பட்ட வில்லிசை கச்சேரியை மீண்டும் மக்கள் பார்க்கும் கலையாக மாற்றிய மாதவியை சாதனையாளராக கருதி அவருக்கு காமராஜர் விருது கொடுத்திருக்கிறார் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை

- Advertisement -