Loading...

கீழக்கரையில் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் அடித்துக் கொலை - 5 பேர் கைது!

A

Admin

November 03, 2026 • 05:21 AM

கீழக்கரையில் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் அடித்துக் கொலை - 5 பேர் கைது!

கீழக்கரையில் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் அடித்துக் கொலை - 5 பேர் கைது! ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த இளைஞர் ரிஸ்வான் ஆஷிக் ரஹ்மான் (25), 500 பிளாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. பெண்கள் கூச்சலிட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை பிடித்து கட்டி வைத்து தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழக்கரை போலீசார், படுகாயமடைந்த இளைஞரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இளைஞரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக சீனி ஹமீது,ஹாஜா மொய்னுதீன்,அமீர் அப்துல்லா,முகமது ஆதில்,நூர் முகம்மது ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கீழக்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


- Advertisement -