Loading...

சிறையிலிருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகள்

A

Admin

October 28, 2026 • 04:38 AM

சிறையிலிருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகள்

சிறையிலிருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகள் - உசிலம்பட்டியில் விடிய விடிய போலீசார் தீவிர வாகன சோதனை மதுரை.அக் ;28 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள சிறையிலிருந்து, சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 விசாரணை கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, 10 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதில், 4 கைதிகளை மீண்டும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது., இதன் ஒரு பகுதியாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் மைய பகுதியான உசிலம்பட்டி பேருந்து நிலையம், ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் விடிய விடிய போலீசார் தீவிர வாகன சோதனையுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள், கார் மற்றும் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும், சோதனை செய்து தப்பி ஓடிய கைதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

- Advertisement -