சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு மன்றம் தொடக்கம்!
சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு மன்றம் தொடக்கம்!
மதுரை நவம்பர்; 07
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு மன்றம் தொடங்கப்பட்டது. இம்மன்றத்தைப் பள்ளித் தலைமையாசிரியர் கே. எஸ். நாராயணன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தேர்தல் நடைமுறைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் ஜனநாயகக் கடமைகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து , மாணவர்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்ற மாணவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் தலா இரண்டு மாணவர்கள் அடுத்தகட்டப் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டிகளுக்கு முதுகலை ஆசிரியைகள் சுகந்தி மற்றும் மீனலட்சுமி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.