சேலம் சீலநாயக்கன்பட்டியில் உதயம் பாரம்பரிய ஆடை ஷோரூம் திறப்பு விழா! சேலம்.நவ.04:
சேலம் சீலநாயக்கன்பட்டியில் உதயம் பாரம்பரிய ஆடை ஷோரூம் திறப்பு விழா! சேலம்.நவ.04: சேலம் சீலநாயக்கன்பட்டி, அமானிகொண்டலம்பட்டி ஆட்டோ நகரில், பருத்தி வேட்டிகள் மற்றும் சட்டைகளுக்குப் புகழ்பெற்ற உதயம் நிறுவனத்தின் புதிய பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஷோரூமை சேலம் GTP குழுமத்தின் தலைவர் முத்துராஜன் திறந்து வைத்தார். சேலம் சிகரம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குநர் சுகுமார் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். சேலம் KMB குழுமத்தின் தலைவர் ஜனாப் யூசுப் பாஷா முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை சேலம் ஏசியன் பைப்ஸ் & குவாலிட்டி ஸ்டீல் நிர்வாக இயக்குநர் Lion அஷ்ரப் மற்றும் சேலம் ஷிரடி சாய்பாபா ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குநர் கோபி என்ற மணிகண்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களை உதயம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண்ஈஸ்வர் வரவேற்றார். புதிய ஷோரூமில் உயர்தர பருத்தி வேட்டிகள், சட்டைகள், திருமணப் பட்டு வேட்டிகள், பட்டுச் சட்டைகள், டிஷ்யூ வேட்டி-சட்டைத் தொகுப்புகள், ஜோடி ஆடைகள், குர்தா, பைஜாமா உள்ளிட்ட பாரம்பரிய மற்றும் நவீன ஆடை ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டைகள் மற்றும் கோட்-சூட் தைப்பதற்கான பல்வேறு வகையான துணி ரகங்கள், துண்டுகள், உள்ளாடைகள், ரவிக்கைகள், வண்ணச் சட்டைகள், வெள்ளைச் சட்டைகள், பனியன்கள் மற்றும் பாக்கெட் கொண்ட ஆயத்த வேட்டிகள் எனப் பல்வேறு ஆடை வகைகளும் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தரமான பருத்தி ஆடைகள், பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் நவீன வாடிக்கையாளர் தேவைகளை ஒருங்கிணைத்து, சீலநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து வகையான ஆடைகளையும் வாங்குவதற்கான சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஷோரூம் திறப்பின் மூலம் உதயம் நிறுவனம் தனது வணிக விரிவாக்கத்தில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.