மதுரை தீர்த்தகாடு பகுதியை சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் வன்னியரசு பங்கேற்பு
மதுரை தீர்த்தகாடு பகுதியை சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் வன்னியரசு பங்கேற்பு மதுரை நவ 4 மதுரை தீர்த்தகாடு பகுதியை சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் வன்னியரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது நீதிமன்ற உத்தரவு இருந்தும் கடந்த 40 ஆண்டுகளாக பட்டா வழங்காத நிலையில் தற்பொழுது பட்டா வழங்கியுள்ளோம் இன்னும் 300 பேருக்கு வழங்க வேண்டியது உள்ளது உலகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா என்பது வடிவேலு செல்வது போல ரசீது இருக்குது கிடைத்ததை காணோம் என்ற போல தான் உள்ளது. மனுதாரர்களுக்கு பட்டா கிடைப்பதற்கான வழிவகையை செய்ய செயல்திட்டம் உள்ளது 80 ஆண்டுகள் சுதந்திர நாட்டில் இன்றும் மனைபட்டாவிற்காக கையேந்தி நிற்பது மண்ணின் மைந்தர்கள் பூர்வ குடிகள் தான் ; மேட்டுக்குடிகள் அல்ல; பட்டா இல்லாமல் நிற்கிறார்கள். மனை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது 80 ஆண்டுகால சுதந்திரத்திற்கு தலைகுனிவு அவமானம் இதனை தீர்க்கக் கூடிய அரசு வந்திருக்கிறது ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இதனை நாங்களே செய்கிறோம் கோரிக்கை வைக்கும் இடம் மாறி அதனை செய்யும் இடத்திற்கு வந்திருக்கிறோம் இதுதான் முக்கியமான தலைகீழ் மாற்றம். கடந்த ஆட்சியில் உள்ள பிரச்சனைகள் பற்றி பேசவிரும்பவில்லை மேதகு பிரபாகரன் சொன்னது போல சொல்லுக்கு முன் செயல் இதுதான் என்னுடைய வார்த்தை தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மக்களுக்கான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு சாட்சி தான் அடித்தட்டு மக்களுக்கான என்ன பிரச்சனை என கண்டறிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் சட்ட ஒழுங்கு பிரச்சினை , விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சனை எல்லா காலத்தில் இருக்கும் பிரச்சனை தான். அதற்காக போராடியிருக்கிறோம் சட்ட ஒழுங்கு பிரச்சனையை எதிர்த்து போராடுகின்ற எதிர்க்கட்சிகள் வந்து அரசு என்ன மாதிரியான நடக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்ட சொல்லுங்கள் அதனை செய்யலாம்; போற போக்கில் அவதூறுகளை விதைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களுக்கான வழியில் செல்கிறோம் இதனை திசை திருப்பும் வேலை வேண்டாம் வேங்கைவயல் பிரச்சனை சட்ட ஒழுங்கு பிரச்சனை தென் மாவட்டங்களில் நடந்த படுகொலைகள் அனைத்து பிரச்சனைகளிலும் கடைசியாக கவின் படுகொலையில் நான்கு நாட்களும் அதே களத்தில் நின்று போராடினோம் யாரும் எங்களுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல தேவையில்லை இன்றைக்கும் என்னென்ன பிரச்சனைகள் இருக்கோ முரண்படும் இடத்தில் சுட்டிக்காட்டுகிறோம் நாங்கள் அமைச்சரவையில் இருப்பதால் முதலமைச்சரிடம் நேரடியாக சொல்கிறோம் வெளியில் போராட வேண்டிய அவசியம் இல்லை கவின் படுகொலை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யப்பட்டது அதனை எதிர்த்து தாயார் போராட்டத்தை நடத்தும் போது உடனடியாக சென்று இதை மறுசீராய்வு போட வேண்டும் என முதலமைச்சரிடம் நேரடியாக சொல்லியிருக்கிறோம் இன்று மறு சீராய்வு போடப்பட்டிருக்கிறது. எங்களுடைய கருத்துக்களை நேரடியாக முதலமைச்சரிடம் பேசுகிறோம் திருமாவளவன் அவர்கள் மக்களுடைய பிரச்சனை மக்களுக்காக முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லும் இடத்தில் இருக்கிறார். போராட்டமும் நடத்துகிறோம் போராட்டம் நடத்தாமல் இல்லை ; மக்களுக்கான பிரச்சினைகளில் சமீபத்தில் கோயம்புத்தூர் மாணவன் தற்கொலை செய்த விவகாரம் விசிக போராட்டம் நடத்தினோம் கோயம்புத்தூர் பக்கத்தில் ஒத்தையாள் கிராமத்தில் கை வெட்டப்பட்ட சம்பவம் ஆகிவற்றிக்கு உடனடியாக போராட்டம் நடத்தியது விசிக இயக்கம் ; உடனடியாக முதலமைச்சரை தொடர்பு கொண்டு நிதி கொடுக்க வேண்டும் என அரசு வேலை வேண்டும் என சொன்னோம் இது எல்லாமே கடந்த காலங்களில் நடக்காத செயல் திட்டங்களை முன்னெடுக்கிறோம் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு குறித்த கேள்விக்கு எங்க ஊரில் தான் பேசியுள்ளார். அவர் அமைச்சராக பேசவில்லை, ஒரு தாயாராக பேசியிருப்பதாக கூறிவிட்டு தான் பேசியிருக்கிறார்; ஒரு தாயாருடைய பார்வையில் இருந்து பேசியிருக்கிறார் என்றார். நாங்கள் வந்து 3 மாதம்தான் ஆகின்றது நாங்கள் அமைச்சராக இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை விசிக அமைச்சராக இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லையா? மூன்று மாதத்தில் அல்லது நான்கு மாதத்தில் எங்களுடைய பணிகள் என்னென்ன செயல்திட்டங்கள் சென்று கொண்டிருக்கிறது என்னுடைய துறையில் விடுதிகள் பராமரிப்பிற்கு கூடுதல் நிதி வாங்கியுள்ளோம், வெளிநாட்டு கல்விகளுக்கான கல்வி கட்டணம் கூடுதலாக வாங்கி கொடுத்துள்ளோம். கல்லூரிகளுக்கு ஸ்காலர்ஷிப் 12ஆயிரமாக உயர்த்தியுள்ளோம் இதனை எல்லாம் செய்தது தவறு என்கிறீர்களா ? இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு மட்டும் முதலமைச்சர் செல்வதாக எதிர்கட்சிகள் கூறுவது குறித்த கேள்விக்கு? முதலமைச்சர் சென்றதற்கு பின்பு அவர்கள் செல்வார்கள் தேர்தல் ஒட்டியான செயல்பாடுகள் என்ற குற்றச்சாட்டு இருந்தால் அவர்கள் இந்த தொகுதிக்கு போகாமல் இருக்க வேண்டும் அவர்கள் செல்வார்கள் தேர்தல்வேலை ஆரம்பித்திருக்கிறது. முதல்வர் விராலிமலை சென்று இருக்கிறார் என்றால் இடைத்தேர்தலை தாண்டி மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களை செய்கிறார் இடைத்தேர்தலுக்கு அதற்கும் தொடர்பு இல்லை என்பதுதான் என்னுடைய பார்வை தவெக பாஜகவுடன் நெருங்கியுள்ளதா என்ற எதிர்கட்சிகள் கேள்விக்கு ? பாஜக அரசு வந்தே மாதரம் பாட வேண்டும் என்று சொன்னபோது தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அரசு தவெக அரசு , நாடு முழுவதும் யாருமே தீர்மானம் இயற்றுவதற்கு தயங்கிக் கொண்டிருந்த சூழலில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாட வேண்டும் என்று தீர்மானம் இயற்றிய அரசு தவெக அரசு வந்தே மாதத்திற்கு எதிராக எந்த மாநிலத்திலும் அதை பண்ணவில்லை வக்பு வாரிய திருத்தம், ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதுதமிழ்நாடு சட்டமன்றத்தில் தான் பாஜகவோடு இணைந்து செயல்படுகிறார்கள் என்றால் பாஜக கொண்டுவந்த மிக முதன்மையானவிற்றிற்கு இரண்டு சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தையும் ஒரு அரசு கொண்டு வந்திருக்கிறார்கள்; இதனை யாரும் கொண்டு வந்திருக்க மாட்டார்கள் துணிச்சலோடு கொண்டுவரப்பட்ட தீர்மானம் இதனை விசிக மட்டுமல்லாமல் திமுகவும் சட்டப்பேரவையில் வரவேற்றுள்ளது ;பாஜகவுடன் இணைந்து செயல்படுவது என்பது அவதூறு விடுதிகளில் மாட்டுகறி திட்டம் குறித்த கேள்விக்கு? மாட்டுக்கறி விவகாரத்தில் மாணவர்கள் விடுதியில் ஆய்வு செய்த போது அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள் முதலமைச்சரிடம் கூறி பரிசீலனை பண்ணுகிறோம் என்று தான் சொன்னோம் இதனை திரித்து மாட்டுக்கறி போட போவதாக அவதூறு விஷம பிரச்சாரங்களை செய்தனர் அது உண்மை அல்ல ; இதற்குப் பின்புலமாக ஆர்எஸ்எஸ் உள்ளது சனாதன கும்பல் உணவை வைத்து அரசியல் செய்யக்கூடிய இந்த வேலையை செய்கிறார்கள் நோக்கத்தை திசை திருப்பும் வேலைகள் வேண்டாம் நாங்கள் மாணவர்களுடன் நலன் கருதி செயல்படக்கூடிய அரசு மாணவர்கள் நலனுக்காக பணியாற்றக்கூடிய அமைச்சர் திசைதிருப்பலை குறித்து கண்டு கொள்ள மாட்டோம் தவெக அரசுக்கு அதிமுக 0 என கூறுவது குறித்த கேள்விக்கு? எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவை பூஜ்ஜியம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஒன்றொன்றாக கரைந்து கொண்டே வருகிறது மாநில உரிமைகளுக்காக பேசக்கூடிய கட்சி அதிமுக அந்த கட்சி அழிந்து போகும் பூஜ்ஜியமாக கூடாது பூஜ்ஜியம் இல்லாமல் பிளஸ் ஆக வேண்டும் என்ற பிளசிங் பண்ணுகிறேன் என்றார். சீமான் பொதுவேட்பாளர் குறித்த கேள்விக்கு? அண்ணன் சீமான் அவர்கள் பொது வேட்பாளர் என அவரே சொல்லி கொள்கிறார் நான் தான் அடுத்த முதல்வர் என சொல்லிக் கொள்வது போல பேசுகிறார்; யாரும் அவரை முன்மொழியவில்லை அவர் ஆசைப்படுகிறார் எந்த திராவிட கருத்தியலுக்கு எதிராக எந்த பார்ப்பண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்போம் என சொன்னாரோ அந்த கடப்பாரையை தூக்கிப் போட்டுவிட்டு திராவிட கடப்பாரையை எடுத்துக் கொண்டு தமிழ் தேசிய கோட்டையை இடிப்பதற்கு கிளம்பியிருக்கிறார் சீமானை போன்ற பிழைப்புவாதி சீமானை போன்ற சந்தர்ப்பவாதி சீமானை போன்ற இம்மாதிரியான ஒரு அரசியல் செய்யக்கூடியவர்கள் யாரும் இருக்க முடியாது 2009க்கு பிறகு கட்சி ஆரம்பிக்கிறார் இன படுகொலை செய்த காங்கிரஸ் இனப்படுகொலைக்கு காங்கிரசோடு இணைந்து செயல்பட்ட திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் மூன்று பேரும் துரோகிகள் என கட்சி ஆரம்பித்தார் நாங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பெரியார் கோட்பாட்டின் அடிப்படையில் திராவிட கருத்துகளை முன் வைத்தோம் அதுதான் எங்களுடைய செயல்பாடு இந்த மாதிரியான திராவிட கருத்தியலுக்கு எதிராக மிக மோசமாக இழிவாக பேசிவிட்டு இப்போது வந்து பேசுவது என்பது சந்தர்ப்பவாதம் இல்லையா? ஒரு எம்எல்ஏ பதவிக்காக கொண்ட கொள்கையை விட்டுவிட்டு போகிறீர்கள் என்றால் இதைவிட பிழைப்புவாதம் என்னவாக இருக்கும் தமிழ்நாட்டைப் பொறுத்து மட்டும் விசிக தமிழ் தேசிய அரசியலில் களத்தில் உண்மையாக இருக்கக்கூடியவர்கள் என்பது புலம்பெயர் தமிழர்கள் இப்போதாவதுபுரிந்து கொண்டால் சரி முழுமையாக திராவிட பிரியாணிக்காக கையேந்தி நிற்கக்கூடிய தட்டேந்தி நிற்கக்கூடிய சீமான் போன்றவர்கள் ; அவர் வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம் என சொல்கிறார் மண்டியிட்டு கிடக்கிறார் திராவிடத்திடம் மண்டியிட்டு கிடைக்கிற பிழைப்பு வாதி தான் சீமான் அவரை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அது தான் அம்பாசமுத்திரம் தொகுதி சொல்லக்கூடிய செய்தி கூட்டணி இல்லாமலே திமுக இரண்டாம் இடம் குறித்த கேள்விக்கு? அவர்கள் தேமுதிமுகவை இக்னோர் செய்கிறார்கள் எங்கள் தலைவர் சொன்னது போல இரண்டாவது இடத்திலே இருக்க விரும்புகிறார்களா ; வெற்றி்தான் முக்கியம் என்றார். ஓவர்சீஸ் நிறுவனத்தின் மூலம் பணியாளர்கள் தேர்வு என் அரசின் முயற்சி குறித்த கேள்விக்கு? தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை; இதனை கட்டாயம் முதலமைச்சரிடம் எடுத்து சொல்வோம்