அக் , 2ல் ஆடு, கோழிகளுக்கு தடை
அக் , 2ல் ஆடு, கோழிகளுக்கு தடை
மதுரை :30
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்ப்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் தமிழ்நாடு அரசின் (ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாக துறை சார்பில் காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு 02.10.2026 அன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இதர உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட இறைச்சி விற்பனை கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது. தடையை மீறி செயல்படுவர்கள் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார சட்டம் 1939ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் கௌரவ் குமார்,தெரிவித்துள்ளார்.