Loading...

அரியநாச்சியம்மன் கோவில் 32- ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் விழாவில்வடமாடு எருது கட்டு

A

Admin

September 28, 2026 • 11:23 AM

அரியநாச்சியம்மன் கோவில் 32- ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் விழாவில்வடமாடு எருது கட்டு

அரியநாச்சியம்மன் கோவில் 32- ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் விழாவில்வடமாடு எருது கட்டு


ராமநாதபுரம் 


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோவில் 32- ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு,

வடமாடு எருது கட்டு நேற்றுநடைபெற்றது .

இதில் ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 காளைகள், 126 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.கிராம திடல் மைதானத்தின் நடுவில்,வடகயிறு புதைத்து, கயிற்றின் மறுபுறத்தில் மாடு கட்டப்பட்டு எருது கட்டு நடைபெற்றது 

ஒவ்வொரு காளைகளுக்கும் தலா 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, காளைகள் ஆடுகளத்தில் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களிடம் அடங்கமறுத்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பணம், சில்வர் அண்டா, குத்து விளக்கு, கட்டில், பீரோ, மரக்கன்று உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை வண்ணாங்குளம், பம்மனேந்தல், வேப்பங்குளம், 

குண்டுகுளம், கோவிலாங்குளம், புதுக்கோட்டை உள்ளிட்ட கமுதி சுற்று வட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்துரசித்து சென்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வண்ணாங்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்தனர்.

- Advertisement -