Loading...

ஆராய்ச்சி நிறுவனங்கள் உலக தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க உதவ வேண்டும்

A

Admin

October 03, 2026 • 04:03 AM

ஆராய்ச்சி நிறுவனங்கள் உலக தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க உதவ வேண்டும்

'தேசிய தொழில்நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்'போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் உலக தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க உதவ வேண்டும்

மத்திய அரசின் உணவு பதப்படுத் தும் தொழில்கள் அமைச்சகத்தின் இணை செயலாளர் ரஞ்சித் சிங் பேச்சு


தஞ்சாவூர் அக்டோபர் 3

'தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க உதவ வேண்டும் என்று மத்திய அரசின் உணவு பதப்படுத்து ம் தொழில்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரஞ்சித்சிங் கூறினார்

    தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின்(' நிப்டெம்') கல்வி நிறுவனத்தின் நிறுவனதின விழா நடைபெற்றது .டீன் வெங்கடாஜல பதி அனைவரையும் வரவேற்றார். இயக்குனர் பழனி முத்து தலைமை தாங்கினார்.

      இதில் ஹிமாச்சலப் பிரதேசத் தில் உள்ள இந்திய உணவுக் கழக இயக்குனர் குமத்சிங், கெயின் இந்தியா இயக்குனர் புவனேஸ்வரி பாலசுப்ரமணியன் ,காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ரமேஷா, பெர்மெண்ட்டா பயோ டெக் லிமிடெட் இன் மேலாண்மை பொருள் மணிகண்டா பயோடெக் லிமிட்டெட் இன் மேலாண்மை இயக் குனர் பிரசாந்த் நாகரே ஆகியோர் கலந்து கொண்டனர்.

     இதில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச் சகத்தின் இணை செயலாளர். ரஞ்சித் சிங் கலந்து கொண்டு உணவு செறிவூட்டலுக்கான சிறப்பு மையத்தை திறந்து வைத்து பேசியதாவது;

      உணவுவூட்ட சேர்க்கை என்பது புதிய விஷயம் அல்ல .அது ஏற்கன வே நடைமுறையில் உள்ளது .150 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் ,மக்களின் வருமானநிலை மற்றும் அத்தியா வசிய ஊட்டச்சத்துக்களில் கிடைக் கும் தன்மை ஆகியவற்றை கருத் தில் கொண்டு, இது எந்த அளவுக்கு பெரிய அளவில் தேவைப்படுகிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

     இந்த உணவூட்டச் சேர்க்கை என் பது அறிவியல் பூர்வமான பாது காப்பான, நிலையான, மலிவான மற்றும் பெரிய அளவில் கொண்டு செல்லக்கூடிய அமைப்பை உருவா க்குவதைப் பற்றியதாகும். இதன் மூலம் மக்கள் தினமும் சாப்பிடும் பழக்கமான உணவுகளின் வழியாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அவர்களை சென்றடையும். இதற்காக மக்கள் தனியாக மாத்திரைகளோ அல்லது கூடுதல் சத்து மருந்துகளோ எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை .ஏனெனில் அது பொருளாதார ரீதியாகவும் தினசரி பழக்க வழக்கங்களை பின்பற்று வதிலும் கூடுதல் சுமை ஏற்படுத் தும், எனவேதான் உணவூட்டச் சேர்க்கை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தியா உணவு ஊட்ட செயற்கைக்கான ஒரு நல்ல சூழ்நிலை உருவாக்கியுள்ளது. அரிசி, கோதுமை, கோதுமை மாவு, பால், சமையல் எண்ணெய் ,உப்பு போன்ற முக்கிய உணவுகளுக்கான தரம் மற்றும் வழிகாட்டுதலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இப்போது நமது அடுத்த சவால் உணவூட்ட சேர்க்கை சாத்தியம் என்பதே நிரூபிப்பது மட்டுமல்ல, அதை மேலும் சிறப்பானதாகவும் திறம்பட செயல்படக்கூடியதாகவும், குறைந்த செலவிலும் மாற்றுவது தான்.

     இந்தியாவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான உணவு பதப்படுத்தும் துறை சிறிய மற்றும் அமைப்பற்ற துறையாகவே உள்ளது. எனவே சிறிய உற்பத்தியாளர்களுக்கும் ஏற்ற எளிய தர கட்டுப்பாடு, குறைந் த செலவிலான கண்காணிப்பு முறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தினர் உருவாக்க வேண்டும். இந்த மையம் ஒரு ஆராய்ச்சி மையமாக மட்டுமில்லா மல், தொழில்நுட்பத்தையும் கற்றுத் தரும் தலமாகவும் உயர வேண்டும் சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்ற வகையில் உணவு உலக தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க நாம் உதவ வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.

 நிறைவில் பதிவாளர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.

- Advertisement -