ஆலங்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா
ஆலங்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா
ஆலங்குளம் செப் - 26
:
தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஆலங்குளம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரி மருத்துவர் ராணி ஸ்ரீகுமார், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலைகதிரவன் ஆகியோருடன் இணைந்து ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டார்.
விழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், அவர்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை முன்னிறுத்தி அரசு சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் விழாவில் எடுத்துரைக்கப்பட்டது.
விழாவில் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.