இடிந்துவிழும் நிலையில் வகுப்பறை மாணவர்கள் கோரிக்கை
இடிந்துவிழும் நிலையில் வகுப்பறை மாணவர்கள் கோரிக்கை ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், விக்கிரவாண்டி வலசை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டிடம் மிக மோசமாக உள்ளதால் உடனடியாகச் சீரமைத்துத் தர வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பள்ளியில் V. வலசை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது பள்ளி கட்டிடம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுவதால், மாணவர்கள் அச்ச உணர்வுடனேயே வகுப்பறைகளில் அமர்ந்து கல்வி கற்கும் சூழல் நிலவுகிறது. மழைக் காலங்களில் வகுப்பறைக்குள் நீர் கசிவதுடன், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் உடனடியாகத் தலையிட்டு, பழுதடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்து தேவையான சீரமைப்புப் பணிகளையோ அல்லது புதிய கட்டிடத்தையோ விரைந்து கட்டித்தர வேண்டும் என அப்பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.