இந்திய ராணுவ காலாட்படை நாள் கொண்டாட்டம் சென்னை, 29 நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் படைவகுப்பு (ரெஜிமென்டல்) மையத்தில் 80வது காலாட்படை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்திய ராணுவ காலாட்படை நாள் கொண்டாட்டம் சென்னை, 29 நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் படைவகுப்பு (ரெஜிமென்டல்) மையத்தில் 80வது காலாட்படை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள போர் நினைவிடத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள், காலாட்படை வீரர்களின் வீரத்திற்கும் உன்னத தியாகங்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்திய ராணுவத்தின் பெருமைமிக்க பாரம்பரியம், மரபுகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தைச்சேர்ந்த பள்ளிகளிலிருந்து சுமார் 340 மாணவர்கள் மெட்ராஸ் ரெஜிமென்டல் செண்டரில் கல்விச் சுற்றுலா சென்றனர். இந்த நிகழ்ச்சியில், ஆயுதப்படைகளில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்த உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, படைவகுப்பு மையத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க படைமுகாம், குவார்ட்டர் கார்டு மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்டல் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் சென்று பார்வையிட்டனர். மாணவர்கள் இராணுவ வாழ்க்கை, படைவகுப்பின் வரலாறு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி குறித்த புரிதலைப் பெற்றனர். ராணுவத்தின் மெட்ராஸ் படைவகுப்பு, தனது வீரர்களைக் கவுரவிப்பதற்கும், உள்ளூர் மக்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அடுத்த தலைமுறையினரை தேசத்திற்கு சேவை செய்ய ஊக்குவிப்பதற்கும் இந்திய இராணுவம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்நிகழ்ச்சி மீண்டும் வெளிக்காட்டியது.