Loading...

இப்படி ஒரு முதலாளி கிடைச்சா வாழ்க்கையே மாறிடும்!

A

Admin

October 03, 2026 • 04:08 AM

இப்படி ஒரு முதலாளி கிடைச்சா வாழ்க்கையே மாறிடும்!

இப்படி ஒரு முதலாளி கிடைச்சா வாழ்க்கையே மாறிடும்!


குஜராத், சூரத் நகரை சேர்ந்த வைர நிறுவன அதிபர் தான் சவ்ஜி தோலாகியா. இவருடைய நிறுவனம் பெயர் ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி சூரத்தில் மிகப்பெரிய வைர பட்டை தீட்டும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று, 75 நாடுகளுக்கு வைரங்களை ஏற்றுமதி செய்கிறார்கள்.


பெரும்பாலான இடங்களில் தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ், போனஸ் தான் கொடுப்பாங்க. ஆனா இவர் தன்னோட ஊழியர்களின் உழைப்பை பாராட்ட ஒரு பிரமாண்டமான முடிவை எடுத்தார். தீபாவளி பரிசாக தனது ஊழியர்களுக்கு 1,260 கார்கள், 400 வீடுகள் மற்றும் நகைகளை பரிசாக அறிவித்தார்.


இதற்காக மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார். இவருடைய லட்சியம் என்னன்னா, அடுத்த ஐந்து வருடத்தில் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் சொந்தமாக ஒரு வீடும், ஒரு காரும் இருக்க வேண்டும் என்பது தான். ஏற்கனவே கார் வைத்திருப்பவர்களுக்கு வீடும், வீடு இல்லாதவர்களுக்கு காரும் கொடுக்கும் வகையில் இந்த திட்டத்தை வடிவமைத்தார்.


இது இப்போது மட்டும் இல்லை, 2012-ம் ஆண்டு முதலே இப்படி பரிசுகளை கொடுத்து வருகிறார். 2014-ல் மட்டும் 491 கார்கள், 207 பிளாட்டுகளை பரிசாக கொடுத்தார். அதனால் இந்த முறை ஏற்கனவே பரிசு பெற்றவர்களை தவிர்த்து, புதிய தகுதியான ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது.


ஊழியர்களை தன் குடும்பமாக நினைக்கும் இவரை போன்ற முதலாளிகள் இருந்தால் எந்த நிறுவனமும் தோற்காது.

- Advertisement -