ஊட்டியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
ஊட்டியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
நீலகிரி அக் 01
நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரியில்
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மரம் நடும் விழாவில் துணை வனப் பாதுகாவலர் சுசத் புல்கல் தலைமையிலும், நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. சீனிவாசன் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் சகாயராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் சகாயராஜ் கூறுகையில் இன்றைய தினம் உலக இதய தினம் நம்முடைய இந்த மரங்களின் உதவியால் மட்டுமே நாம் அனைவரும் சுவாசிக்கின்றோம் அப்படிப்பட்ட மரங்களை இன்றைய தினத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் நடுவதை அனுமதித்த மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரியின் மாணவர்களை கொண்டு உலக இதய தினத்தை நினைவூட்டும் வகையில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது இதில் அரசு மருத்துவர்களும் அரசு செவிலியர்கள் மற்றும் கல்லூரியின் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த மரம் நடு விழாவில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் மரு. ரவிசங்கர், இதயவியல் இணை பேராசிரியர் மரு. கிரிஷ் சைனி மரு சசிகுமார் மரு மாரியப்பன் உட்பட நீலகிரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.