ஊட்டியில் லட்சங்களில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது
ஊட்டியில் லட்சங்களில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது
நீலகிரி நவ. 06.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 3 சென்ட் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய இரண்டு லட்சம் வரை லஞ்சம் கேட்ட ஊட்டி தாலுகா மஞ்சூர் பகுதி பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர் நீலகிரி மாவட்டம் குந்தா நடு ஹட்டி ஊரைச் சார்ந்த வசந்த் என்பவர் தனது தந்தையின் பெயரில் உள்ள பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய விஏஓ வை அணுகியுள்ளார் இப்போதெல்லாம் அவ்வளவு ஈசியாக பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியாது எனவும் அப்படி செய்வதென்றால் இரண்டு லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ளதோடு பலமுறை அவரை அலைகழித்துள்ளார் ஒன்றரை லட்சம் கொடுத்தால் உடனே மாறுதல் செய்து தரப்படும் என்றவுடன் அவ்வளவு பணம் தர முடியாது என வசந்த் தெரிவித்துள்ளார் இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறையை அனுகி புகார் தெரிவித்த அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் ஜாய் தயாள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சண்முகவடிவு மற்றும் அதிகாரிகளுடன் சென்று சம்பந்தப்பட்ட உமா பிரியாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ஒன்றரை லட்சம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கைது செய்யப்பட்ட உமா பிரியாவை பணிநீக்கம் செய்ததோடு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர்