ஊரணிக் கரையைச் சுற்றி பேவர் பிளாக் தளம்
ஊரணிக் கரையைச் சுற்றி பேவர் பிளாக் தளம் : ஆட்சியர் பார்வை
மதுரை அக்:3
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
காதக்கிணறு ஊராட்சியில் 14-வது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் (2025–2026) ரூ.10.78 இலட்சம் மதிப்பீட்டில் ஊரணிக் கரையைச் சுற்றி பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணியினையும், அதே ஊராட்சியில் சி.ஜி.எப்.,திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத் தெருவில் பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.