எதிர்க்கட்சி என்றாலே குறை சொல்லத்தான் செய்யும் கடந்த 60 ஆண்டுகால ஆட்சியில் முறைகேடு ஊழல் குற்றச்சாட்டு பற்றி பேச நிறைய உள்ளது, எம்எல்ஏ கார்த்திகேயன்.
*எதிர்க்கட்சி என்றாலே குறை சொல்லத்தான் செய்யும் கடந்த 60 ஆண்டுகால ஆட்சியில் முறைகேடு ஊழல் குற்றச்சாட்டு பற்றி பேச நிறைய உள்ளது,
எம்எல்ஏ கார்த்திகேயன்.
மதுரை செப் 19
மதுரை சிந்தாமணி அருகில் உள்ள தனியார் திருமண மஹாலில்
யுனைடெட் ஆர்க்கிடெக் 2026 தென் தமிழகம் அளவிலான அதிநவீன விவசாய பொருட்களுக்கான கண்காட்சியை மதுரை தமிழக வெற்றி கழகம் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தொடக்கி வைத்தார்.
அதனைத்
தொடர்ந்து எம்எல்ஏ கார்த்திகேயன் தெரிவிக்கையில் யுனைடெட் ஆர்க்கிடெக்
2026 ன் 20 வது கண்காட்சியை தொடங்கி வைத்ததில் உள்ளபடியே பெருமை அடைகிறேன். கண்காட்சியை சுற்றி பார்த்தேன் விவசாயிகளுக்கு பெரிதும் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் விவசாய பெருமக்கள் பயன்பெறும் கண்காட்சியாக உள்ளது. விவசாயத்தில் இன்றைக்கு உள்ள தொழில் முன்னேற்றத்தை தெரிந்து கொண்டு பண்டைய தொழில் முறையை விடுத்து இன்றைக்கு இருக்கும் சூழலுக்கு ஏற்றார் போல் விவசாயம் செய்து பயனடைவார்கள். எதிர்க்கட்சி என்றாலே குறை சொல்ல தான் செய்யும் மக்கள் அனைவரும் பயன் அடையக்கூடிய ஆட்சி இது 100% தூய்மையான, நேர்மையான ஆட்சி வெளிப்படை தன்மையுடைய ஆட்சி என மக்கள் அனைவரும் பாராட்டு கொண்டிருக்கின்றனர். கடந்த அறுபது ஆண்டுகளில் நடந்த ஆட்சியில் முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதைப்பற்றி எல்லாம் பேசுவதற்கு நிறைய உள்ளது. அதெல்லாம் பேசுவதற்கு நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை மக்களுக்கு நல்லது செய்வதற்காக வந்துள்ளோம் நல்லபடியாக ஆட்சி கொடுப்போம் மக்களின் தேவை அறிந்து நிறைவேற்ற முயற்சி செய்வோம்
என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குனர் பேசும்போது: பசுபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரிப்பதால் உலகம் முழுவதும் அதன் பாதிப்பு இருக்கும். இந்த ஆண்டு மழையின் அளவு குறைவாக இருக்கும் என்று சொல்கிறார்கள் அதனால் விவசாய பெருமக்கள் இரு பொருள் நல்ல முறையாக பயன்படுத்துவதற்கு இந்த கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும். இயற்கை விவசாயத்தை போற்றி வளர்க்க வேண்டும். ஆள் பற்றாக்குறையை போக்க பண்ணை இயந்திரங்கள் பயன்படுத்தி விவசாயத்தை பெருக்குவதற்கு போன்றவையில் கண்காட்சியில் உள்ளது. இதனை மதுரை மட்டுமல்ல
தென் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.