எல்லாமதத்திற்கும் சமமானவர் முதல்வர் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்
எல்லாமதத்திற்கும் சமமானவர் முதல்வர் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்
ஒரு முதல்வர் என்பவர் அனைவருக்குமானவர்,அனைத்து சாதி/மதத்திற்கும் பொதுவானவர்,அனைத்து மத பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லும் கடமை இருக்கு. அனைத்து மத வழிபாட்டு சம்பிரதாயத்தை மதிக்கும் ஒருவராக இருக்கனும்.
விஜய் ஒரு கிறிஸ்தவர் அனைத்து மத பண்டிகைக்கும் ஒரு முதல்வராக வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போகலாம்,சர்ச்க்கு மட்டும் சென்று வழிபட்டு கோயில்,மசூதிகளுக்கு செல்லாமல் தவிர்க்கலாம் அது அவரது மத நம்பிக்கையின் கீழ் வரும்,யாரும் அதை விமர்சிக்க முடியாது...மற்ற மதங்களுக்கு எதிரான செயலை செய்தால்தான் கேள்வி கேட்கலாம்.
ஆனால் விஜய் திருச்செந்தூர் சென்ற போதும் மதுரை மீனாட்சியம்மண் கோவிலுக்கு சென்ற போதும் நான் இந்த மதத்தின் சம்பிரதாயங்களை முழுமையாக ஏற்கிறேன் என்று கோப்பில் கையெழுத்திட்டே சென்று தரிசனம் செய்து இருக்கிறார்.
எல்லா மதத்தை சார்ந்தவர்களும் எல்லாம் மாறிமாறி எல்லா வழிபாட்டு தளங்களுக்கும் செல்கிறார்களே அது என்ன லிஜய் மட்டும் கையெழுத்து போட்டுட்டு போகனுமா என்றால்....பொதுமக்களுக்கு அந்த விதிமுறையை பின்பற்ற முடியாது யார் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று அறியவும் முடியாது,
மற்றவர்கள் போல நெற்றியில் வைத்த விபூதி /குங்குமத்தை வைத்தவுடன் தீட்டுபட்டது போல்அவர்கள் முன்னிலையில அழித்து அவமானப்படுத்தவில்லை,அவரின் தனி பாதுகாவலர் மூசா(இஸ்லாமியர்)அவரும் கூட அதை அழிக்கவில்லை.
இதுதான் சனாதனம்....இதை அழிப்பேன்னு சொல்லித்தான் ஒன்னு அழிஞ்சு போயிட்டுருக்கு.