கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச இணைய (இன்டெர்நெட்) தினம் கடைப்பிடிப்பு.
கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச இணைய (இன்டெர்நெட்) தினம் கடைப்பிடிப்பு. கந்தர்வகோட்டை, அக். 29 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச இணைய (இன்டர்நெட்) தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசுகையில் உலகம் முழுவதும் தகவல் தொடர்பு, கல்வி, அறிவியல், மருத்துவம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணையத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சர்வதேச (இன்டெர்நெட்) இணைய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் இன்டெர்நெட் என்பது இன்றைய நவீன உலகின் இன்றியமையாத தகவல் தொடர்பு சாதனமாக விளங்குகிறது. உலகின் எந்தப் பகுதியிலும் நடைபெறும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவும் இணையம் பெரிதும் உதவுகிறது. கல்வியில் இணையத்தின் பங்கு மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பாடக்குறிப்புகள், கல்வி சார்ந்த காணொளிகள், மின்னூல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வினாக்களை இணையத்தின் வாயிலாகப் பெற முடிகிறது. இணையவழிக் கல்வி மூலம் வீட்டிலிருந்தே பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், அரசின் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள், தேர்வு அறிவிப்புகள், வேலை வாய்ப்புச் செய்திகள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களையும் இணையத்தின் மூலம் எளிதாக அறிந்துகொள்ளலாம். இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம்! இணையம் பல நன்மைகளை வழங்கினாலும், அதனைப் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் பயன்படுத்துவது அவசியமாகும். சமூக வலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது. இணையவழி மோசடிகள், போலியான இணைய தளங்கள், மற்றும் தேவையற்ற இணைப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது நல்லது. பொறுப்பான இணையப் பயன்பாடு அவசியம், தேவையற்ற நேர விரயத்தைத் தவிர்த்து கல்வி, அறிவு வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும். இணைய தளத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம். பொறுப்புடன் பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதே இணைய (இன்டர்நெட்) தினத்தின் முக்கிய நோக்கமாகும் என்று கூறினார்.