காவல்துறையினர் பூட்டை உடைத்து, பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபட நடவடிக்கை எடுத்தனர்
சின்னசேலம் அருகே உள்ள குரால் கிராமத்தில், பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து கோவில் கதவு பூட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஹனாஸ் இலியாஸ் தலைமையிலான காவல்துறையினர் பூட்டை உடைத்து, பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபட நடவடிக்கை எடுத்தனர்.
பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஹனாஸ் இலியாஸ்சை நேரில் சந்தித்து, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பொன்னாடை அணிவித்து, புத்தகங்கள் வழங்கி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.