Loading...

கோட்டூரில் ரூ.35 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மையம் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

A

Admin

October 07, 2026 • 01:27 PM

கோட்டூரில் ரூ.35 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மையம் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கோட்டூரில் ரூ.35 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மையம் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!


அக் 08 தேனி மாவட்டம்,


கோட்டூர் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சமூக பராமரிப்பு சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கட்டணமின்றி எளிதில் சேவைகளைப் பெறும் வகையில், உலக வங்கி நிதியுதவியுடன் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்' கீழ் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் பெரியகுளம் உட்கோட்ட அளவிலான இந்த ஒருங்கிணைந்த சமூக பராமரிப்பு சேவை மையம் கோட்டூரில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இச்சேவை மையம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து மறுவாழ்வு மற்றும் உதவிச் சேவைகளையும் ஒரே குடையின் கீழ் (One Stop Centre) வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டதாகும். இமையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கிய மருத்துவ மற்றும் மறுவாழ்வு வல்லுநர்கள் உட்பட மொத்தம் 12 பணியாளர்கள் சேவையாற்றுவார்கள்.


இச்சேவை மையத்தில் வழங்கப்படும் முக்கியச் சேவைகள் இயன்முறை சிகிச்சை (Physiotherapy): தசை மற்றும் எலும்பு இயக்கப் பயிற்சிகளுக்காக. மனநல ஆலோசனைகள் (Psychological Counseling) வழங்கல். ஆக்குபேசனல் தெரபி (Occupational Therapy) அன்றாடப் பணிகளைத் தனித்துச் செய்யத் தேவையான உடற்பயிற்சிகளுக்காககேட்டல், பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சை (Audiology, Speech and Language Therapy): பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாடுகளைச் சரிசெய்ய. கண்பார்வை பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் (Optometry) வழங்குதல். சிறப்புக்கல்வி (Special Education): அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்க. எனவே, இச்சேவை மையத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சென்று தங்களுக்குத் தேவையான மறுவாழ்வுச் சேவைகளைப் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -