கோத்தகிரியில் காட்டு யானையிடம் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு வனத்துறை நிவாரணம்
கோத்தகிரியில் காட்டு யானையிடம் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு வனத்துறை நிவாரணம் நீலகிரி அக் 29 நீலகிரி வனக்கோட்டம் கோத்தகிரி வன சரகத்திற்கு உட்பட்ட பாத்திமட்டம் கிராமத்தில் வசிப்பவர் துரைசாமி 59 இரவு 8 மணி அளவில் அங்குள்ள தேயிலை தொழிற்சாலைக்கு காட்டு வழியாக வேலைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு வழி பாதையில் முன்னாள் வந்து கொண்டிருந்த காட்டு யானை துரைசாமியை தாக்கியது தப்பிக்க வழி இல்லாததால் யானை அவரை தூக்கி வீசியது துரைசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று யானையை விரட்டி விட்டு பலத்த காயமடைந்த துரைசாமியை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி உயிரிழந்தார் இதனால் கோத்தகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த கோத்தகிரி வனச்சரகர் ரவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை … [9:44 am, 28/10/2026] Madurai G Media: ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுகடைகள் 3 நாட்கள் மூடல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா 30 ந்தேதி நடைபெறஉள்ளது இதனை முன்னிட்டு பொதுஅமைதி மற்றும் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் பொருட்டு அக்டோபர் 28 29 30 ஆகிய மூன்று தினங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனைகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள்எப்.எல்.2 எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் பொருட்டு அக்.28 29 30 ஆகிய மூன்று தினங்கள் முழுமையாக மூடிவைத்திட ஆணையிடப்படுகிறது மேற்கண்ட நாட்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சிதலைவர் மா.சிவகுரு பிரபாகரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்