கோவையின் மருத்துவத்துறை மணிமகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்.
கோவையின் மருத்துவத்துறை மணிமகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்.
கோவை என்றாலே பல கல்வி நிறுவனங்கள், உயர் சிகிச்சை மருத்துவமனைகள், உருக்கு ஆலைகள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள், மோட்டார் நிறுவனங்கள் என்று பலதரப்பட்ட நிறுவனங்கள் புகழ்பெற்று அதன் பெயர்கள் சர்வதேச எல்லைகளையும் தாண்டி ஊருக்கு பெருமை சேர்க்கும் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்,
அவ்வரிசையில் எலும்பு சம்பந்தப்பட்ட எந்த சிகிச்சையானாலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக உலகமெங்கும் சொல்லப்படும் பெயர் கோவை கங்கா மருத்துவமனை தான்.
அதன் பிறகு எண்ணற்ற ஆர்த்தோ மருத்துவமனைகளும், புகழ்பெற்ற மருத்துவர்களும் கோவையை ஆட்கொண்டாலும், முந்தைய தலைமுறையின் பின்புறம் இல்லாமல் தன் உழைப்பால், படிப்பால் உயர்ந்தவர், உடுமலை அருகே மலையாண்டிபட்டினத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து கோவையின் அடையாளமாக மாறி இருக்கும் கார்த்திக் செல்வராஜ், இன்று உலகமே திரும்பி பார்க்கும் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்
பல ஏழை எளிய மக்களின் வலியை, குறைந்த செலவில் போக்கியவர் கார்த்திக் செல்வராஜ் முருகப்பன் என்றால் அது மிகையாகாது,
அஜித்குமார் போன்ற நடிகர்கள் முதல், கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட தோனி முதல் விராட் கோலி வரை, எலும்பு சம்பந்தப்பட்ட சிகிச்சை எதுவானாலும் அணுகுவது இவரைத்தான். ரோபோடிக்ஸ் மற்றும் எலும்பில் துளையிட்டு
சர்ஜரி செய்யும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவர், பல்வேறு நாடுகளுக்கு சென்று மருத்துவத் துறையில் பதக்கங்களை குவித்தவர்.
இவ்வளவு பேர் புகழ் இருந்தாலும் மனிதர் எப்பொழுதும் டவுன் டு எர்த் தான், மிகவும் எளிமையானவர். வயதானவர்கள், குழந்தைகள்,பெண்கள், ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்கள், என சிகிச்சைக்கு வரும் அனைவரிடத்தும் முதலில் செலுத்துவது அன்பைத்தான், பிறகுதான் சிகிச்சை எல்லாம்.
வலியுடன் தான் வாழ வேண்டும், வேறு வழி இல்லை என கைவிடப்பட்டவர்கள், தவறான சிகிச்சையினால் பாதிப்படைந்தவர்கள், அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என வந்தவர்கள், எளிய பிசியோதெரபி மூலமாக அறுவை சிகிச்சையின்றி குணமாவதை பார்க்கிறோம். தேவைப்படுவோருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்கிறார்.
அதனால்தான் என்னவோ 98 சதவீதம் பேர் மருத்துவ இணையதளங்களில் இவரைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்கிறார்கள்.
ஹெர்ப் கிர்பி ஸ்காலர்ஷிப் 2007 அகில இந்திய சிறந்த எலும்பு முறிவு மருத்துவ வாசிப்பாளர் விருது ஆல் இந்தியா பெஸ்ட் ஆர்த்தோபெடிக் ரெசிடென்ட் - 2008), எஸ்க்கா டிராவலிங் ஃபெல்லோ (2015) போன்ற பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் என்பதில் மிகையாகாது.