Loading...

சங்கரன்கோவிலில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் ஆலோசனை

A

Admin

October 21, 2026 • 01:46 PM

சங்கரன்கோவிலில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் ஆலோசனை

சங்கரன்கோவிலில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் ஆலோசனை

சங்கரன்கோவில்: 22

சங்கரன்கோவில் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் ஆலோசனைகள் வழங்கினார் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில் வார்டுகளில் பொதுமக்களை சந்தித்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்த செல்லும் நகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணியாளர்கள் பொதுமக்களை சந்தித்து டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டியும் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கவேண்டியும் மேலும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் மழை நீர் தேங்காதவாறு சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் படியும் தேவையற்ற டயர் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்காதபடி சுகாதாரமாக வைத்துக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கும்படி டெங்கு கொசு ஒழிப்பு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ், ஆலோசனைகள் வழங்கினார் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர் கைலாச சுந்தரம் கவுன்சிலர் செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் உடனி ருந்தனர்.

- Advertisement -