Loading...

சமரசம் மூலம் தீர்வு காண்போம் என விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள் பங்கேற்பு

A

Admin

September 24, 2026 • 09:29 AM

சமரசம் மூலம் தீர்வு காண்போம் என விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள் பங்கேற்பு

சமரசம் மூலம் தீர்வு காண்போம் என விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள் பங்கேற்பு

திருப்பத்தூர் செப் :25


திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் நீதிமன்றம் வரை திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி செல்வம் தலைமையில் வாங்க பேசி தீர்வு காண்போம் சமரசம் மூலம் தீர்வு காண்போம் என்று பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் திருப்பத்தூர் பேருந்து நிலையம் சாலையோரத்தில் இருந்த சாலை ஓர வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் நோட்டீஸ் வழங்கி சமரசமாக பேசி தீர்வு காண்போம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்படுகின்றன நிலுவையில் உள்ள உங்கள் வழக்குகளை நேரடியாகவோ அல்லது வழக்கு நேர் மூலமாக சமரசம் மையத்திற்கு அனுப்ப கோறலாம்

சமரசம் ஏற்படவில்லை என்றால் உங்கள் வழக்குகளை நீதிமன்றத்தில் தொடரலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள்,என்.சி.சி. மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்

- Advertisement -