சவுதியில் சாலை விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த 2 செவிலியர்கள் உட்பட 5 பேர் பலி
சவுதியில் சாலை விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த 2 செவிலியர்கள் உட்பட 5 பேர் பலி
சவுதி அக் :4
சவுதி அரேபியாவில் நடந்த கோர சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
வார விடுமுறையையொட்டி பொருட்கள் வாங்கச் சென்றபோது அவர்கள் பயணித்த வாகனம் மீது மற்றொரு வாகனம் பயங்கரமாக மோதியதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் விவரம்:
தேவம்மா ஹெப்சிபா (33) - திருச்சி, தமிழ்நாடு
விஜயலட்சுமி (36) - சென்னை (பூர்வீகம் மூணாறு)
ஜெய்சிமோல் மேத்யூ (46) - பாலா, கோட்டயம், கேரளா
ஜோபினா ஜானி (26) - குருமுல்லூர், கோட்டயம், கேரளா
வாகனத்தை ஓட்டிய சவுதி இளைஞர்
நால்வரும் செவிலியர்களாக சவுதியில் பணியாற்றி வந்தனர்.