சாலை பாதுகாப்பை பார்வையிட்ட மதுரை ஆட்சியர்
சாலை பாதுகாப்பை பார்வையிட்ட மதுரை ஆட்சியர்
மதுரை அக் : 10
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா மாவட்டத்தில் மாதாந்திர சாலைப் பாதுகாப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதன் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை எண் 38 மதுரை – திருச்சி சாலையில், மேலூர் வட்டம், புதுப்பட்டி சந்திப்பில் (அலிஃப் ஹோட்டல் அருகில்) ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உயர் கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும், அபாய எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் டி., சந்திப்பு எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார். சேதமடைந்துள்ள உலோகத் தடுப்புகளை மாற்றி அமைக்கவும், பாதசாரிகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடப்பதற்கான தடுப்புக் கம்பிகள் அமைக்கவும், ஓய்வுப் பகுதி குறித்த எச்சரிக்கைப் பலகை நிறுவவும் உத்தரவிட்டார். மேலும், சாலையோரங்களில் அலிஃப் ஹோட்டலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க அவ்வப்போது கண்காணிப்பு மேற்கொள்ளவும், சாலையோர மரக்கிளைகளை அகற்றி வாகன ஓட்டிகளுக்குத் தெளிவான பார்வை கிடைப்பதை உறுதி செய்யவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்