சிறையிலிருந்து தப்பிய 17 விசாரணைக் கைதிகளும் 36 மணி நேரத்தில் மீட்பு:
சிறையிலிருந்து தப்பிய 17 விசாரணைக் கைதிகளும் 36 மணி நேரத்தில் மீட்பு: தேனி காவல்துறை அதிரடி! அக்டோபர் 30 தேனி மாவட்டம், க.விலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்டச் சிறையிலிருந்து கடந்த 26.10.2026 அன்று 17 விசாரணைக் கைதிகள் எதிர்பாராதவிதமாகத் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் உடனடியாகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.பல்முனைத் தேடுதல் மற்றும் அதிரடி நடவடிக்கை கைதிகளை விரைந்து பிடிக்கும் பொருட்டு, காவல்துறையினர் துரிதமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தச் சிறப்புத் தேடுதல் வேட்டையில் கீழ்க்கண்ட அதிகாரிகள் மற்றும் ஆளினர் களமிறக்கப்பட்டனர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 1காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (DSP) 4 காவல் ஆய்வாளர்கள் (Inspectors): 14 சார்பு ஆய்வாளர்கள் (SIs) 8சிறப்பு அதிரடிப்படையினர் (STF): 50 பேர் (5 தனிக் குழுக்கள்) ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் காவலர்கள் 170 பேர் (2 கம்பெனிகள்) தேனி மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், நவீன ட்ரோன் கேமராக்கள் (Drone Cameras) மூலம் வான்வழித் தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டுப் பல்முனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. 36 மணி நேரத்திற்குள் வெற்றி காவல்துறையினரின் இரவு பகல் பாராத அயராத உழைப்பு மற்றும் துரிதமான நடவடிக்கையின் பலனாக, தப்பிய 17 விசாரணைக் கைதிகளும் வெறும் 36 மணி நேரத்திற்குள் எவ்வித அசம்பாவிதமுமின்றிச் வெற்றிகரமாக மடக்கிப் பிடிக்கப்பட்டனர். மாநிலக் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அவர்களின் நேரடி உத்தரவின்படியும், தெற்கு மண்டல காவல்துறை தலைவர் (IG) அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீரிய நடவடிக்கையில், சிறப்பாகப் பணியாற்றி குற்றவாளிகளைக் கைது செய்த அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் மற்றும் காவலர்களுக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து மனமார்ந்த பாராட்டுகள் குவிந்து வருகின்றன.