Loading...

சிவகங்கையில்  ஆளுநர் விருது தேர்வு முகாம் நிறைவுவிழா

A

Admin

October 17, 2026 • 11:12 AM

சிவகங்கையில்  ஆளுநர் விருது தேர்வு முகாம் நிறைவுவிழா

சிவகங்கையில் 

ஆளுநர் விருது தேர்வு முகாம் நிறைவுவிழா


பாரத சாரண சாரணிய சங்கம் தமிழ்நாடு 


சிவகங்கை:அக்:18

சிவகங்கை கல்வி மாவட்டத்தின் சார்பில் மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் "ஆளுநர் விருது தேர்வு முகாம்" 14. 10. 2026 முதல் 16. 10.2026 முடிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் 64 சாரணர்களும் 33 சாரணியர்களும் கலந்து கொண்டனர்.

இன்றையநிறைவுவிழாவில் மாவட்ட அமைப்பு ஆணையர் நரசிம்மன் வரவேற்று பேசினார். பிறகு சாரண இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் சாரணர் சாரணியரிடம் பிறருக்கு உதவுதல், உண்மைபேசுதல் சிக்கனம் இவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார். முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்வில் சுவாமி விவேகானந்தா பதின்ம பள்ளியின் தாளாளர் அழகு முருகன் மற்றும் ஆசிரியப் பயிற்றுனர் காளிராஜா கலந்து கொண்டனர். மாநில தேர்வர்கள் மெஹபூப்கான், சந்திரமாலா மற்றும் துணைத் தேர்வர்களாக பாஸ்கரன், இந்திராகாந்தி ஆகியோர்கலந்துகொண்டு தேர்வை நடத்தினர். இவ்விழாவில் ரவிச்சந்திரன், நரேஷ். சபரிமலை, சங்கர். மாரிஸ், தனபால், ஆரோக்கிய அமுதா , முத்துக் காமாட்சி,மாலதி, சண்முகாதேவி, ஜெயபிரபா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றியுரை கூறினார். விழா இனிதே நிறைவுற்றது.

- Advertisement -