சிவகங்கை அருகே செம்மண் கடத்திய இருவர் கைது. ஜேசிபி , டிப்பர் லாரி பறிமுதல்.
சிவகங்கை அருகே செம்மண் கடத்திய இருவர் கைது. ஜேசிபி , டிப்பர் லாரி பறிமுதல்.
சிவகங்கை:ஆக்: 09
சிவகங்கையை அடுத்துள்ளது பொன்னாம்பட்டி. இந்தக் கிராமத்தில் தோட்டம் வைத்திருக்கும் ராமச்சந்திரன்(74) என்பவர் தோட்டக்கலை துறையின் மூலம் பண்ணைக் குட்டை அமைக்க அனுமதி பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் பண்ணைக் குட்டையில் எடுக்கப்படும் செம்மண்ணை டாரஸ் லாரிகள் மூலம் வெளியில் விற்பனைக்கு அனுப்புவதாக சிவகங்கை தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அப்போது காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கிராம மக்கள் செம்மண் ஏற்றி வந்த லாரியை வஸ்தாபட்டி என்ற கிராமத்தில் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அங்கு வந்த சிவகங்கை போலீஸ் டி. எஸ். பி. மற்றும் வருவாய்த்துறையினர் டாரஸ் லாரியையும் மண் எடுக்க பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் செம்மண் வெளியில் கொண்டு போக காரணமாக இருந்த தோட்ட உரிமையாளர் வெ. ராமச்சந்திரன் மற்றும் ஜேசிபி உரிமையாளர் செ.சுகுமார்(34) ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இது பற்றி தெரிவிக்கும் போது:
அனுமதி இன்றி மண் மற்றும் கனிம வளங்களை யார் அள்ளிச் சென்றாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.