Loading...

சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் பங்கேற்பு

A

Admin

October 13, 2026 • 03:03 PM

சிவகங்கை    மாவட்டத்தில் மக்கள்  குறைதீர்க்கும்  நாள்  கூட்டம்: மாவட்ட  ஆட்சியர் ப.ஆகாஷ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:
மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் பங்கேற்பு:

சிவகங்கை:அக்:13
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 345 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சைலேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
பாலகிருஷ்ணன் உட்பட அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -