சிவகங்கை யூனியன் அரசு ஒப்பந்ததாரர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு:
சிவகங்கை யூனியன் அரசு ஒப்பந்ததாரர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு: பதிவுபெற்ற ஒப்பந்ததாரர்கள் புகார். சிவகங்கை:அக்:30 சிவகங்கை மாவட்டம், சிவகங்கை யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு விபிஜிராம் ஜி திட்டத்தில் சுமார் பத்து கோடி மதிப்பீட்டில் பேவர் சாலை , மெட்டல் சாலைகள் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆஃபர் பணிகளில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் தனது ஆதரவாளர்களான ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கு மட்டுமே பணிகளை ஒதுக்கீடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. ஒப்பந்தப் பணிகள் விசயத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் தலையிட்டு அனைத்து பணிகளையும் தமது ஆளுங்கட்சிக்காரர்களுக்கு மட்டுமே தரவேண்டும் எனவும் , மற்றபடி அஸோசியேஷனில் உள்ள பதிவு செய்துள்ள அரசு ஒப்பந்தாரர்களுக்கு எந்த பணிகளையும் ஒதுக்க முடியாது எனவும் எம்எல்ஏ கூறியதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அரசு பதிவுபெற்ற ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் புதுப்பட்டி சிவக்குமார் , பொருளாளர் ஜெகன் உள்ளிட்ட சுமார் நூறுக்கும் மேற்பட்ட அரசு ஒப்பந்ததாரர்கள் திட்ட அலுவலர் , வட்டார வளர்ச்சி அலுவலர் கி ஊ ஆகியோரிடம் ஒப்பந்தபணிகளை அரசு ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கிட வேண்டுமென மாவட்ட திட்ட இயக்குனர் , கூடுதல் ஆட்சியர் மற்றும் சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை நேரில் சந்தித்து அரசின் பதிவுபெற்ற ஒப்பந்ததார்களுக்கு மட்டுமே பணிகளை வழங்கிட வேண்டுமென முறையீடு செய்தனர். இதனிடையே மற்றுமொரு அரசு ஒப்பந்ததாரர்களான தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான நாகராஜ் , ரவி , பிரபு ஆகியோர் அரசு இயந்திரம் முறையாகச் செயல்படுகிறது எனவும், எம்எல்ஏ குழந்தைராணி நாச்சியார் சரியாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்...