செக்கானூரணியில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு
செக்கானூரணியில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு
செக்கானூரணி அக் 26
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கானூரணியில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள்:
7 பேருந்துகள் நிறுத்தும் இடங்கள்
27 வணிகக் கடைகள்
2 உணவகங்கள்
ஆண்களுக்கான 2 காத்திருப்பு அறைகள்
பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான 2 காத்திருப்பு அறைகள்
போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறை அலுவலகம்
ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனியாகக் கழிப்பறை வசதிகள்
21 காய்கறிச் சந்தைக் கடைகள் உள்ளன.
பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதால், செக்கானூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கப்பாண்டியன்,கருப்பையா, விஜய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.