சென்னை தி.நகரில் த.வெ.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை :
சென்னை தி.நகரில் த.வெ.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை : 3 தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான ஆனந்த் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதுடன், மக்களின் நலன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில், இன்று சென்னை முல்லை நகர் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில், அப்பகுதிகளைச் சேர்ந்த 1,000 பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மக்களின் நலனே முதன்மையானது என்ற நோக்கத்துடன், தொகுதி மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து, அவர்களின் தேவைகளுக்கேற்ப நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் மூலம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.