Loading...

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலையை அமைக்க வேண்டும்

A

Admin

October 01, 2026 • 02:30 PM

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலையை அமைக்க வேண்டும்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலையை அமைக்க வேண்டும்


மதுரை அக் 02 மதுரை
சேவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நல்ல மணி பூமிநாதன் உத்தரவின் பேரில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரவாஞ்சிநாதன் தலைமையில் மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் உள்ள சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி தலைவர் அசாருதீன் மகிளா காங்கிரஸ் தலைவி கமலா மதுரைவீரன், மாவட்ட பொதுச் செயலாளர் பிச்சைமணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்,
அதன் பின்னர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வதிவுருத்தலின் படி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வர இருக்கும் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனிலும் சென்னை மெரினா கடற்கரை சாலையிலும்
டாக்டர் சேவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவ சிலையை நிறுவ வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு
மதுரை மாநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- Advertisement -