செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளரின் செல்போனைப் பறித்து செய்தியாளர் பணியைத் தடுத்த சம்பவம்
செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளரின் செல்போனைப் பறித்து செய்தியாளர் பணியைத் தடுத்த சம்பவம்
பல்லாவரம் நவ 6
சென்னை அடுத்த திரிசூலம் பகுதியில், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் செல்போனை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி அவர்களின் உதவியாளர் கோகுல் பறித்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது
பத்திரிகையாளர்களின் செய்திப் பணியில் தலையிடுவதும், அவர்களின் செல்போனைப் பறிப்பதும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எதிரான செயலாகும். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தியாளர்களின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தவும் தமிழ்நாடு பாரதிதாசன் பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது