Loading...

தஞ்சாவூரில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையும் மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்

A

Admin

October 03, 2026 • 04:03 AM

தஞ்சாவூரில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையும் மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்

தஞ்சாவூரில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையும் மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்


தஞ்சாவூர் அக்டோபர் 3


தஞ்சாவூர் கதர் அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் விழாவும் மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்.

    மகாத்மா காந்தி அவர்களின் திருஉருவப்படத்தினை திறந்து வைத்து, மலர் தூவி, மாவட்ட கலெக் டர் மரியாதை செலுத்தினார். பின்னர் தீபாவளி சிறப்பு கதிர் விற்பனையை துவக்கி வைத்தார்

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்ததாவது;

    2026-2027 ஆண்டிற்கு மாவட்டத்தி ற்கு ரூபாய் 100 .00லட்சம் விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. குறியீட்டினை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப் படும் அசல் வெள்ளி, சரிகை பட்டு ரகங்கள் , பாலிஸ்டர் ரகங்கள் 2ல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப் பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள் ளது.சுத்தமான இலவம் பஞ்சுனால் மிக நேர்த்தியாக தயார் செய்யப் பட்ட மெத்தை மற்றும் தலையணை கள், காட்டன் மெத்தை விரிப்புகள் இவை அனைத்தும் தஞ்சாவூர் கதர் அங்காடியில் கிடைக்கும் என்பதே தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து கதிர் பாலிஸ்டர், பட்டு இரகங்களுக்கு 30 சதவீதம் மற்றும் உல்லன் இரகங்களுக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு துறை பணியாளர்கள் மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் திரும்பச் செலுத்தும் வகையில் கடன் முறையில் கதிர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

     இக்கதரங்காடியில் குளியல் சோப்புகள், சலவை சோப்புகள், காலணிகள்,ஜவ்வாது ஊதுபத்தி, கப்சாம்பிராணி, சலவை திரவ சோப்புகள், கை கழுவும் திரவ சோப் புகள், சந்தன மாலைகள், சுகப்பிரி யா வலி நிவாரணி, அக்மார்க் தேன் வகைகள் மற்றும் நறுமணமிக்க பிராக் ரென்ஸ் ஊதுபத்தி வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது

     பொதுமக்கள் அரசு மற்றும் தனி யார் நிறுவனங்கள் தாங்கள் தங்கள் ஆதரவினை தொடர்ந்து நல்கி, தமிழகத்தில் உள்ள நூற்பா ளர்கள் ,நெசவாளர்கள், வாழ்க்கை யில் ஒளி வீச உதவிடுமாறு மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்தார்

     நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி, கதிர் அங்காடி மேலாளர் கந்தசாமி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -