Loading...

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்17,700 மேற்பட்ட இருதய சிகிச்சைகள்

A

Admin

October 01, 2026 • 02:27 PM

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்17,700 மேற்பட்ட இருதய சிகிச்சைகள்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்17,700 மேற்பட்ட இருதய சிகிச்சைகள்

முதல்வர் மணிமேகலா தகவல்

தஞ்சாவூர் அக்டோபர் 2

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17, 700க்கும் மேற்பட்ட இருதய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முதல்வர் டாக்டர் மணிமேகலை தெரிவித்தார்
உலக இருதய தினம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் இருதயவியல் துறை சார்பில் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் டாக்டர் மணிமேகலா தலைமை தாங்கி னார் .இருதவியல் துறை தலைவர் டாக்டர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் திருச்சி ராமகிருஷ்ணா மருத்துவ மையத் தின் மூத்த இருதய நோய் நிபுணர் டாக்டர் சென்னியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்
இதைத்தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள், பயிற்சி மாணவ, மாணவிகள் ஆகியோர் ஆரோக்கிய மான வாழ்க்கை முறை பின்பற்ற வும் ,இருதய நலனை பாதுகாக்க வும் உலக இருதய தின உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.
பின்னர் முதல்வர் டாக்டர் மணிமேகலா கூறியதாவது;
இருதயம் மற்றும் ரத்த நாளங் களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் இதயத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்கள் கடைபிடிக்க வலியுறுத்துவதே இத் தினத்தின் முக்கிய நோக்கமாகும்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2019ல் ஆம் ஆண்டு கேத் லேப் தொடங்கப் பட்டது. இதுவரை மொத்தம் 17,700 க்கும் மேற்பட்ட கேத் லேப் மற்றும் இருதய சாதன சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேம்பட் ட இருதய இடையீட்டு சிகிச்சைகள் மற்றும் பல்வேறு இதய சிகிச்சை முறைகளில், இதயவியல் துறை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு ள்ளது. இதன் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மேம்பட்ட இருதய சிகிச் சை வசதிகள் தொடர்ந்து வளர்ந்து வருகிறது .முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தகுதி உடைய பயனாளிகளுக்கு மேம்பட்ட இருதய சாதன சிகிச்சை கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்
நிகழ்ச்சியில் துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம், மருத்துவ கண் காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, நிலை கண்காணிப்பாளர் செல்வம் டாக்டர்கள் முகமது இத்ரீஸ், முத்து மகேஷ் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

- Advertisement -