தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 8 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வை 4,259 பேர் எழுதினர்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 8 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வை 4,259 பேர் எழுதினர்.
1,385 பேர் வரவில்லை.
தஞ்சாவூர் செப்டம்பர் 29
தஞ்சாவூரில் 8 மையங்களில் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) க்கு குருப் -1 முதல் நிலை தேர்வில் 4,259 பேர் எழுதினர். 1,385 பேர் வரவில்லை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப்-1முதல் நிலை தேர்வு மாநில முழுவதும் நடந்தது. துணை கலெக்டர், உதவி ஆணை யர் (வணிகவரி), மாவட்ட பதிவாளர், துணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) உதவி ஆணையர் (தொழிலாளர் நலன்) போன்ற அரசு பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்ப தற்காக நடந்த இந்த தேர்வு தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மையங் களில் நடந்தது
வல்லம் கலைமகள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்-திருச்சிசாலை யில் உள்ள மருது பாண்டியர் கல்லூரி, தஞ்சாவூர் பாரத் அறிவிய ல் மற்றும் மேலாண்மை கல்லூரி, தூய அந்தோனியார் மேல்நிலைப்ப ள்ளி, ஏழுப்பட்டி புனித ஜோசப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி,வல்லம் அடைக்கலமாதா கல்லூரி, திருமலை சமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகம், வல்லம் பெரியார் மணியம் மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் ஆகிய 8 இடங்க ளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 5,644 பேர் தேர்வு எழுத அனுமதி சீட்டு அனுப்பப்பட்டு இருந்தது
ஆனால் பல்வேறு காரணங்க ளால் 1385 பேர் தேர்வு எழுத வரவில்லை. 4,259 பேர் தான் தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதுவதற் காக காலை முதலே தேர்வர்கள் உரிய அனுமதி சீட்டுடன் வரத் தொடங்கினர் .புகைப்பட அடை யாள அட்டைகளான ஆதார் அட்டை, பாஸ்போர்ட் ,ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் ஒன்றின் நகலையும் கொண்டு வந்தனர் இதை எல்லாம் கண்காணிப்பாளர் கள் சரிபார்த்த பிறகே தேர்வு மையத்திற்குள் தேர்வுகள் அனுமதிக்கப்பட்டனர்
காலை 9 மணிக்கு மேல் வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக் கப்படவில்லை. தேர்வுகள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன், மற்றும் மின்னணு கைகடிகாரம், ப்ளூடூத் போன்ற எந்தவித மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. தேர்வர் தங்களுக்கு தேர்வு மையங்களுக்கு செல்வத ற்கு ஏதுவாக அனைத்து வட்டங்க ளில் இருந்தும் தஞ்சாவூர் மாநகர த்திற்கும் ,தஞ்சாவூரிலிருந்து தேர்வு மையத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
முன்னதாக தேர்வு நடைபெறும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டி ருந்த முன்னேற்பாடுகள் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் ரேவதி நேரில் பார்வையி ட்டு ஆய்வு செய்தார் .குரூப் -1 தேர்வு குறித்து தேர்வு எழுதிய தேர்வர்கள் கூறும்போது இந்த ஆண்டிற்கான குரூப்-1 வினாத்தாள் சற்று கடின மாக அமைந்திருந்தது. குறிப்பாக வரலாறு மற்றும் கணிதம் சார்ந்த வினாக்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் வகையிலும் சவாலாகும் அமைந்திருந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான கேள்வி களை புரிந்து கொண்டு விடையளிப்பதில் சிரமம் ஏற்பட்டது என்றனர்.