Loading...

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 20, 384 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி நிறைவு கலெக்டர் ரேவதி தகவல்

A

Admin

September 26, 2026 • 12:36 PM

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 20, 384 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி நிறைவு கலெக்டர் ரேவதி தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 20, 384 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி நிறைவு
கலெக்டர் ரேவதி தகவல்


தஞ்சாவூர் செப்டம்பர் 27
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 384 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கலெக்டர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 945 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் 99,573 ஏக்கர் பரப்பளவில் அறுவடை பணி நிறைவடைந்து ள்ளது .நடப்பு ஆண்டில் தற்போது வரை 20 ஆயிரத்து 384 ஏக்கரில் சம்பா சாகுபடி பணி நிறைவடைந் துள்ளது.
மேலும் மாவட்டத்தில் சேமா பொது காப்பீட்டு நிறுவனம் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 2026-27 ஆண்டு க்கான பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் நடப்பு சம்பா, தாளடி பருவத்திற்கு ரூபாய் 583.50 பிரிமியர் தொகையை இறுதி நாளான நவம்பர் 15 ஆம் தேதிக்குள் செலுத்தி விண்ணப்பித்து பயன்பெறலாம்
என்றும் மேலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், நடப்பு சாகுபடி பருவத்திற்கு 4,425 டன் உரம் தற்போது இருப்பில் உள்ளது
அதனை கொள்முதல் பருவத்தில் நெல் வருவதற்கு ஏற்றவாறு விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எனவே கடந்த 22 ஆம் தேதி வரை 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 14 ஆயிரத்து 831 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது இதுவரை 3,153 விவசாயிகளுக்கு ரூபாய் 39.03 கோடி மின்னணு வங்கி பண பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், வேளாண்மை இயக்குனர் (பொறுப்பு )
சாருமதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலை, தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஜெயந்தி, அக்னியாறு வடிநில கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -