தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 அரசு மருத்துவமனைகளில் தினமும் தலா 50 குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 அரசு மருத்துவமனைகளில் தினமும் தலா 50 குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம்
கூட்ட நெரிசலை தவிர்க்க ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி வாரியாக ஏற்பாடு.
தஞ்சாவூர் செப்டம்பர் 29
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 அரசு மருத்துவமனைகளில் தாய் மாமன் தங்க மோதிரம் தினமும் தலா 50 பேருக்கு வழங்கப்படுகிறது. ஒன்றி யம், மாநகராட்சி, நகராட்சி வாரி யாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது
தமிழக அரசின் சார்பில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பை அதிகரிக்கவும் பொது மக்களுக்கு அரசு மருத்துவமனை
களில் மீதான நம்பிக்கை வலுப் படுத்தவும், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்பட்டது இந்த திட்டம் தமிழக முழுவதும் செப்டம்பர்28 முதல் வழங்கப்படுகி றது .இந்தத் திட்டத்தை முதல்-அமை ச்சர் விஜய் மதுரையில் தொடங்கி வைக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவ மனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங் களில் பிறந்த அனைத்து குழந்தை களுக்கும் இந்த தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் பிறந்து தற்போதுவீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக அரசு மருத்து வமனைகளில் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது
அதன்படி தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனையில் செப்டம் 29 தேதி (செவ்வாய்) வருகிற 3, 7, 10, 14 ,17, 23, 27, 30 ,31, தேதிகளில் தஞ்சாவூர் ஒன்றியமும் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளு க்கும் ,30, 5, 8 ,12 ,15 ,21,24, தேதிகளி ல் திருவையாறு பூதலூர் ஒன்றியங் களுக்கும், 1, 6 ,9 ,13, 16 ,22 ,29 ஆகிய தேதிகளில் ஒரத்தநாடு, அம்மாபேட் டை ஒன்றியங்களுக்கும் வழங்கப் படுகிறது .26 ஆம் தேதி திருவை யாறு ,அம்மாபேட்டை ஒன்றியங்க ளுக்கும் வழங்கப்படுகிறது.
கும்பகோணம் அரசு மருத்துவம னையில் 29, 3, 7 ,10 ,14 தேதிகளில் பாபநாசம், கும்பகோணம் ஒன்றிய ங்களுக்கும் ,30, 5, 8 ,12, 17 தேதி திருவிடைமருதூர், கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளுக்கும் ,1, 6, 9, 13, 16தேதிகளில் திருப்பனந்தாள் பாபநாசம் ஒன்றியங்களுக்கும், 15ஆம் தேதி திருவிடைமருதூர், பாபநாசம் ஒன்றியங்களுக்கும், 21ஆம் தேதி திருப்பனந்தாள், கும்பகோணம் ஒன்றியங்களுக்கும், அடுத்த மாதம் அக்டோபர் 26 ஆம் தேதி கும்பகோணம் ஒன்றியம், மாநகராட்சி பகுதிகளுக்கும், 27 ஆம் தேதி கும்பகோணம் ஒன்றியத் திற்கும் வழங்கப்படுகிறது
பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் 29 ,3ஆம் தேதி பட்டுக்கோட்டை ஒன்றியம் நகராட்சி பகுதிகளுக்கும், 30, 5, 8 தேதி மதுக்கூர், திருவோணம் ஒன்றியங்களுக்கும், 1 ,6 ,9 ,12 ,14 தேதிகளில் பேராவூரணி சேதுபாவ ரசத்திரம் ஒன்றியங்களுக்கும்,7 ஆம் தேதி பட்டுக்கோட்டை சேதுவாசத்திரம் ஒன்றியங்களுக்கு ம் ,10 ,13 ,15 ,17 தேதிகளில் பட்டுக் கோட்டை ,திருவோணம் ஒன்றிய ங்களுக்கும் ,16ஆம் தேதி பட்டுக் கோட்டை ,பேராவூரணி ஒன்றியங் களுக்கும், 21 ஆம் தேதி சேதுபாவா சத்திரம் ஒன்றியத்திற்கும் வழங்கப் படுகிறது. பயனாளிகளின் வசதி க்காக அந்தந்த பகுதியில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது .மோதிரம் காலை 10 மணி மற்றும் மதியம் 1 மணி என இரு வேலைகளில் தினமும் காலை 25 பேருக்கும், மதியம் 25 பேருக்கும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகை யில் வழங்கப்படுகிறது.
இதற்கான அழைப்பிதழ்கள் அந்தந்த பகுதி கிராம செவிலியர் கள் மூலம் பயனளிகளுக்கு வழங்க ப்படும் .அழைப்பிதழ் குறிப்பிட்ட தேதி மற்றும் இடத்தில் பயனாளி கள் வருமாறு கலெக்டர் ரேவதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.🤝