தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் சேலம், நவ :1 தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் சேலம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் மாநிலத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையாளர் பாபு, சேலம் தெற்கு மாநகர காவல் துறை ஆணை யாளர் மகேந்திரன் ஆகியோர் சாலைப் பாதுகாப்பு குறித்து சிறப்புரை யாற்றினர். தொடர்ந்து, மாவட்ட செய்தி யாளர்களுக்குத் தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன. மேலும், 'ஒன் மேன்’ திரைப்படத்தின் மூலம் சாதனை படைத்த சங்ககிரி ராஜ் குமார் மாணிக்கத்துக்குப் பாராட்டும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலைமாமணி. பிரபாகர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர்; ஓமலூர் தமிழரசன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்; சேலம் வசந்த், மீடியா பீப்பிள்; கல்வியாளர் முனைவர். கோவிந்தராஜ், அகில இந்திய தமிழ்ச் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர்; சிற்றுளி ராம் கணேசு, முக்கூடல் தமிழ்ச் சங்க நிறுவனர்; டாக்டர் ராசி. சரவணன், வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்டத் தலைவர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்ட னர். மாநிலப் பொருளாளர் ஏ. சேவியர், தேசியக் குழு உறுப்பினர் மா. அசோக் குமார், மண்டலச் செயலாளர் எஸ். பூபதி ராஜா, மாநில அமைப்புச் செய லாளர் ஜி. காதர் ஷெரிப், மாநில நிர் வாகக் குழு உறுப்பினர் இலா. பாஸ்கர், சேலம் மாவட்டத் தலைவர் கே. நட ராஜன், மாநகர் மாவட்டத் தலைவர் என். ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தின் மாநிலப் பொதுச் செயலாளர் திண் புரையாற்றி, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் சீனிவாசன், புதுச்சேரி பத்திரிகையாளர் யூனியன் மாநிலத் தலைவர் தோழர் எம்.பி. மதி மகாராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.