Loading...

தவெக அரசு தேர்தல் வாக்குறுதியை கொடுத்தும் 5 மாதங்கள் ஆகியும் நிறைவேற்றாத நிலையில் அதனை கண்டித்து இடதுசாரி கட்சியினர் கண்டன சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

A

Admin

October 21, 2026 • 01:49 PM

தவெக அரசு தேர்தல் வாக்குறுதியை கொடுத்தும் 5 மாதங்கள் ஆகியும் நிறைவேற்றாத நிலையில் அதனை கண்டித்து இடதுசாரி கட்சியினர் கண்டன சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

*தவெக அரசு தேர்தல் வாக்குறுதியை கொடுத்தும் 5 மாதங்கள் ஆகியும் நிறைவேற்றாத நிலையில் அதனை கண்டித்து இடதுசாரி கட்சியினர் கண்டன சாலை மறியல் ஆர்ப்பாட்டம்*


மயிலாடுதுறை அக் 22 

மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா அங்காடி முன்பு சிபிஐ, சிபிஎம்எல் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள், மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


 

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் துறைராஜ்ஜி தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஜெகதீஸ்வரன் சி பி ஐ, லூர்துசாமி சிபிஐஎம்எல், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துணை செயலாளர் விஜய் இடதுசாரி கட்சிகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தின் போது தவெக கட்சியினர் 

தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் நெல் சாகுபடி நடந்து வரும் நிலையில் நிபந்தனையின்றி புதிய பயிர்கடனை வழங்கிட கோரியும் இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது...


சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

- Advertisement -